

இந்தியாவில் நீரிழிவு நோய் என்பது சுகா தார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் ரத்த சர்க்கரை ஏற்றத் தாழ்வுகள் மூளை, நரம்பு மண்டலத்தை நேரடியாகப் பாதித்து பல தீவிர மூளை நரம்பியல் கோளாறு களை ஏற்படுத்துகின்றன.
பக்கவாதம் (Stroke): நீரிழிவு நோயாளி களுக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாய் களில் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகம். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தடுத்து, உடலின் ஒரு பகுதி செயலிழப்புக்கு (பக்கவாதம்) வழிவகுக்கிறது.
நரம்பியல் கோளாறுகள் (Diabetic Neuropathy): நீரிழிவு நோயால் சுமார் 50% நோயாளிகள் நரம்பு பாதிப்புக்கு ஆளாகின்றனர். இது உடலின் பிற பகுதிகளில் மட்டுமல்லாமல், மூளையைச் சார்ந்த நரம்புகளையும் சேதப்படுத்துகிறது. இதனால் முகத்தில் பலவீனம், கண் பார்வை இரட்டிப்பாதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அறிவாற்றல் இழப்பு - டிமென்ஷியா (Cognitive Dysfunction & Dementia): ரத்தச் சர்க்கரை அளவு நீண்டகாலமாகச் சீரற்று இருக்கும்போது, அது மூளையின் சிந்திக்கும் திறன், நினைவாற்றலைப் படிப் படியாகப் பாதிக்கிறது. இது 'வாஸ்குலர் டிமென்ஷியா' (Vascular Dementia) என்கிற அறிவுசார் திறன் இழப்பு நோயை உருவாக்குகிறது.
அல்சைமர் நோய் (Alzheimer's Disease): வகை-2 நீரிழிவு நோயால் உடலில் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பு, அதிக சர்க்கரை அளவு ஆகியவை, மூளையில் நச்சுப் புரதங்கள் படிவதற்குக் காரணமாகி, அல்சைமர் போன்ற தீவிர மறதி நோய்க்கு வழிவகுக்கலாம்.
தன்னியக்க நரம்பியல் பாதிப்பு (Auto nomic Neuropathy): மூளையிலிருந்து உடலின் உள் உறுப்புகளுக்குச் செல்லும் சமிக்ஞைகளை நரம்புகள் கடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் செரிமானக் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்சினைகள், இதயத் துடிப்பில் சீரற்றதன்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.