ஜிம் சென்றால் இதய செயலிழப்பு ஏற்படுமா? | மறையாத கட்டுக்கதைகள் 12

ஜிம் சென்றால் இதய செயலிழப்பு ஏற்படுமா? | மறையாத கட்டுக்கதைகள் 12
Updated on
3 min read

ஜிம்களில் பயிற்சி செய்யும்போதும் நடைப் பயிற்சிக்குப் பிறகும் மரணங்கள் ஏற்படும் செய்தி அண்மைக் காலத்தில் சமூக ஊடங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. கூடவே இது தவறான கற்பிதத்துக்கு வழிவகுக்கும் சாத்தியமும் உண்டு. இதை வைத்து ஜிம்களில் பயிற்சி செய்வது ஆபத்தா, பயிற்சியின் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது தவறா என்பது போன்ற ஐயங்களும் மக்களுக்கு எழுகின்றன.

ஒருகாலத்தில் அதிக உடல் உழைப்பு கோரும் வேலை செய்த நிலை இருந்தது. தற்போது உட்கார்ந்தபடியே செய்யும் வேலைகள், உடல் உழைப்பு சிறிதும் தேவையற்ற பணிகள் மூலம் பொருள் ஈட்டும் காலத்தில் இருக்கிறோம். பரபரப்பான வாழ்க்கையில் சாப் பிடவோ தூங்கவோகூட நேரமில்லை.

இதில் நாள்தோறும் நடைப்பயிற்சி, மெல்லோட்டம் செல்பவர்கள் குறைவு. உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ப வர்கள் இன்னும் குறைவு. இந்தச் சூழலில் நடைப்பயிற்சி சென்றால் மாரடைப்பு வரும் என்கிற செய்தி பரவினால் என்ன ஆகும்? தென்னிந்தியாவில் உடல் பரும னாக உள்ள பெண்கள் வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக நோய், கல்லீரலில் கொழுப்பு படிதல் நோய், கருமுட்டை நீர்க்கட்டி நோய் போன் றவை அதிகரித்து வருகின்றன.

எனவே, அனைவருமே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற கருத்து இங்கு நிலைபெற வேண்டும். ஜிம்மில் மரணம், நடைப் பயிற்சிக்குப் பிறகு மரணம் ஆகிய செய்திகளே நம்மை அதிகம் வந்தடைகின்றன.

ஆனால், இவை அரிதானவை. பொதுவாக உறக்கத்திலேயே நிகழும் மரணங்கள், அலுவலகத்தில் வேலை செய்யும்போது ஏற்படும் மரணங்கள், வேலை செய்யாமல் வீட்டிலிருக்கும் போது ஏற்படும் மரணங்கள்தான் பெரும்பான்மையானவை. ஆனால், இவற்றுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

உண்மை என்ன?

உண்மையில் உடற்பயிற்சி செய் வது இதய ரத்தநாள அடைப்பு வரும் ஆபத்தைக் குறைக்கிறது. உடலின் தசைகள், எலும்புகளை வலிமை யடையச் செய்வது உடற்பயிற்சியே. நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன் ஆகிய தொற்றா நோய்களுக்கு மூலக் காரணம் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருப்பதே.

சுரக்கப்படும் அளவில் அதிகமாக இருந்தாலும், இன்சுலின் அதன் பணி யைச் சரிவரச் செய்யாமல் போகிறது. இதை ‘இன்சுலின் எதிர்ப்பு நிலை’ (இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்) என்கிறோம்.

இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏற்படும் போது தசைகள் வலுவிழக்கின்றன; கல்லீரலில் கொழுப்பு சேருகிறது; வயிற்றுப் பகுதி, உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேருகிறது; சிறுநீரகங்கள் அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சு கின்றன, அப்படியே அதிகப்படியான நீரையும் தக்கவைக்கின்றன. இன்சுலின்

ரத்தத்தில் அதிகமாக இருப்பதால் ரத்த நாளங்களின் சுவர்கள் இறுக்கமடை கின்றன; இன்சுலின் எதிர்ப்புநிலையில், ரத்தத்தில் குளுகோஸ் அளவு சராசரிக்கும் மேல் அதிகரிக்கிறது. இது நீரிழிவை வரவழைக்கிறது. இப்படிப் பல்வேறு வழிகளில் இன்சுலின் எதிர்ப்பு நிலை நமக்கு ஊறுவிளைக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in