

மிகக் கடுமையான தூக்கமின்மையில் பாதிக்கப்படும் ஒருவரது மூளை, ‘தன்னைத்தானே சாப்பிடத் தொடங்குகிறது’ என்று ‘ஜர்னல் ஆஃப் நியூரோசயின்’ஸில் வெளி யிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இத்தாலியில் உள்ள மார்ச்சே பாலிடெக்னிக் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
நீண்ட காலத் தூக்கமின்மையானது ஆஸ்ட்ரோசைட்டுகள் எனப்படும் மூளை உயிரணுக்களின் செயல் பாட்டை அதிகப்படுத்துகிறது என்பதை ஆய்வில் கண்டறிந் துள்ளனர். ஆஸ்ட்ரோசைட்டுகள் செயல் பாட்டைச் சற்றே விரிவாகப் பார்ப்போம். மூளையில் உள்ள ஒருவகை இணைப்பு (glial cell) உயிரணுக்கள்தான் ஆஸ்ட்ரோசைட்டுகள்.
நரம்பு உயிரணுக் களுக்கிடையே கண்ணுக்குப் புலப்படாத இடைவெளி இருக்கும். இவ்வகைப்பட்ட தொடர்புகளுக் கான பணி முடிந்தவுடன் தேவையற்ற மேற்குறிப்பிட்ட ‘தொடர்பு இணைப்பு உயிரணுக்கள்’ அகற்றப்பட வேண்டும். அதேபோல, பலவீனமான தொடர்புகளும் அகற்றப்பட வேண்டும்.