

வயிற்றில் பூச்சி, பித்தம் :
வேப்பம்பூவை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளவும். அது பித்தத்தை நிறுத்தும், வயிற்றில் பூச்சி தங்காது. வேப்பம்பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிடலாம். வறுத்து, உப்பு சேர்த்துச் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். குழந்தை பெற்றவர்கள் குழந்தை பிறந்து 1 மாதம் கழித்து, வாரம் ஒரு முறை வேப்பம்பூவைச் சாப்பிட்டு வந்தால் நல்லது.
முடக்குவாதம், வாயுவுக்கு :
முடக்குவாதம், வாயுத்தொல்லைக்கு முடக்கத்தான் இலை ரொம்பவும் நல்லது. தோசைக்கு அரைக்கும்போது, இதை 1 கைப்பிடி சேர்த்து அரைக்கவும். 15 நாளைக்கு ஒரு முறையாவது இப்படிச் சாப்பிட்டு வரவும். கஷாயமாகக்கூடச் சாப்பிடலாம். முடக்கத்தான் பொடி கடைகளிலும் கிடைக்கிறது.
குதிகால் வலி, பாத எரிச்சல்:
ஒரு கப் விளக்கெண்ணெயை எடுத்து, அத்துடன் சிவந்த மிளகாய் பழத்தைச் சேர்த்து அரைத்து, நன்றாகக் குழைத்துக் காலில் தடவவும். கொஞ்சம் எரியும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து, அரிசி களைந்த நீரில் கல்உப்பு சேர்த்துச் சூடுபடுத்தி, காலை அதில் வைக்கவும். கால் வலி குறைந்துவிடும்.