எல்லா நலமும் பெற: அல்சைமரும் தேங்காயும்

எல்லா நலமும் பெற: அல்சைமரும் தேங்காயும்
Updated on
1 min read

ஆஸ்பிரின் மருந்து எத்தனை காலமாக பயன்பாட்டில் உள்ளது?

ஆஸ்பிரின் ஒரு நவீன மருந்தாகக் கருதப்பட்டாலும் ஐரோப்பாவிலும் சீனாவிலும் ஆஸ்பிரினின் மூலப்பொருள் ஆறாயிரம் ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது ஆச்சரியமானதே. வில்லோ மரத்தின் பட்டையிலிருந்து ஆஸ்பிரின் எடுக்கப்படுகிறது. ‘மருத்துவத்தின் தந்தை’ ஹிப்போகிரேட்ஸ் காலத்திலேயே வலி நிவாரணியாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. வில்லோ மரப்பட்டையில் சாலிசின் (salicin) என்ற மூலப்பொருள் உள்ளது. இது அசிடைல்சாலிசிலிக் அமிலத்தின் மூலக்கூறுகளைக் கொண்டது. இதே வில்லோ மரக்கட்டையிலிருந்தே கிரிக்கெட் மட்டையும் உருவாக்கப்படுகிறது.

அல்சைமர் நோயைத் தடுப்பதற்கும் அதற்கான சிகிச்சைக்கும் தேங்காய் எண்ணெய் உதவுகிறதா?

டாக்டர் மேரி நியூபோர்ட், அல்சைமரால் பாதிக்கப்பட்ட தன் கணவருக்கு தினசரி இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சாப்பிடக் கொடுத்துவந்தார். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் டிரை கிளிசரைட்ஸ் (எம்.சி.டி.) எனும் பொருள், மூளை செல்கள் சேதமாவதைத் தடுத்து மூளைத்தேய்வைத் தாமதப்படுத்துவதாக தனது கணவர் மூலம் மேரி நியூபோர்ட் நிரூபித்தும் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in