

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன. 16ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதன் நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்தார். அதன்கீழ், தமிழ்வழிப் பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி பயின்று, மருத்துவ கல்வி பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான ஐந்து நூல்கள் முதலமைச்ச ரால் வெளியிடப்பட்டன.
தமிழில் வெளியிடப்பட்ட பன்னாட்டு மருத்துவ நூல்கள்:
1. நடைமுறை உடற்செயலியல்
University Press
2. அறுவை சிகிச்சையில் ஒரு சிறு பயிற்சி
பெய்லி & லவ்,
Taylor & Francis
3. உடற்கூறியல்
கிரே, Elsevier
4. மருத்துவ உடற்செயலியல் கைட்டன் & ஹால்
Elsevier
5. மகப்பேறியல்,
முதலியார் & மேனன்,
University Press