ஆரோக்கிய ஆப்: 1 Mg

ஆரோக்கிய ஆப்: 1 Mg
Updated on
1 min read

நாம் உட்கொள்ளும் மருந்துகள் பற்றியும் மருந்துகளின் பக்கவிளைவுகள் பற்றியும் சொல்கிறது இந்த ‘ஆப்'. ஒரு மருந்து கிடைக்காத பட்சத்தில், அதற்கான மாற்று மருந்தைக் கூறுகிறது. நமக்குத் தேவையான மருத்துவக் குறிப்புகளையும் தொடர்ச்சியாகத் தெரிவிக்கிறது. எந்த நேரத்தில் எந்த மருந்தைச் சாப்பிட வேண்டும் என்று மருந்தின் பெயர், நேரத்தைப் பதிவு செய்துவிட்டால் போதும், சரியாக அலாரம் அடித்து இந்த ‘ஆப்' நினைவுபடுத்திவிடும். இந்த ‘ஆப்'-ல் மருத்துவ ஆலோசனைகள், உடல் சார்ந்த கட்டுரைகளையும் படிக்கலாம். உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை போன்றவற்றைச் செய்துகொள்ள, நம் வீட்டின் அருகில் உள்ள ஆய்வகங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த ‘ஆப்' மூலம் மருந்துகளை ஆன்லைனில் வாங்கவும் முடியும். அனைத்துச் சிறப்பு மருத்துவர்கள் பற்றியும், ஆலோசனைக் கட்டணம், மருத்துவமனைகளின் முகவரி என அனைத்துத் தகவல்களும் இந்த ஒரே ‘ஆப்’-ல் கிடைக்கின்றன.

- விஜயஷாலினி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in