

தீபாவளி ஒரு மகிழ்ச்சியான தருணம். விளக்குகள், வண்ணங்கள், பட்டாசுகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றால் நிறைந்த திருவிழா அது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கான எளிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி, விழிப்புடன் இருப்பது நம் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.
முடிந்தவரைப் பட்டாசுகளைத் தவிர்த்து, சுத்தமான, பசுமையான தீபாவளியைக் கொண்டாடுவது நல்லது. அது தீக்காயங்களையும், உடல் காயங்களையும் தடுக்கும்; காற்று, ஒலி மாசுபாடுகளைத் தவிர்க்கும். முக்கியமாக, சிஓபிடி (chronic inflammatory lung disease), ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற புகையைத் தவிர்க்க அது உதவும். பட்டாசுகளைத் தவிர இந்த பண்டிகைக் காலத்தில், இனிப்புகளையும் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தீக்காய மேலாண்மை: பட்டாசுகளைக் கையாளும்போது நேரிடும் தற்செயலான தீக்காயங்கள் சருமம், கண், சுவாசக் குழாய் ஆகியவற்றில் காயங்களை ஏற்படுத்தும். வெப்பத்துடனான தொடர்பு, தொடர்பின் காலம், எரிந்த ஆடை, முதலுதவியின் திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்ட அளவில் தீக்காயங்கள் ஏற்படும். தீக்காயங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சருமத்தின் தடிமனைப் பொறுத்து மேலோட்டமானவை அல்லது ஆழமானவை என வகைப்படுத்தப்படுகின்றன.
முதலுதவி
l எரிந்த பகுதியைக் குளிர்ந்த நீரில் மூழ்க வைக்கவும் அல்லது தண்ணீரில் நனைத்த துணியால் மூடிவைக்கவும்.
l பெரிய தீக்காயம் ஏற்பட்டால், போர்வையால் சுற்றவும். நகைகளை அகற்றவும்.
l பெரிய தீக்காயங்கள், கண்களிலும் கைகளிலும் ஏற்படும் தீக்காயங்கள், குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் ஏற்படும் தீக்காயங்கள் ஆகியவற்றுக்கு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை தேவை.
சிகிச்சையின் நோக்கங்கள்
l உடலின் நீரிழப்பை மீட் டெடுத்தல்
l மன, உடல் அதிர்ச்சி யைத் தடுத்தல்
l பொருத்தமான வலி நிவாரணிகளைப் பயன் படுத்தி வலியைக் கட்டுப் படுத்தல்
l தகுந்த நடவடிக்கைகளால் வடு, சுருக்கம் போன்ற இரண்டாம் நிலை சிக்கல்களைத் தடுத்தல்.
என்ன அணியலாம்? - வெளிர் நிறமான பருத்தி உடைகளையும் மூடிய காலணிகளையும் அணிவது நல்லது. மிகவும் தளர்வான ஆடைகளைக் கண்டிப்பாக அணியக் கூடாது. ஏனெனில், எளிதில் தீப்பற்ற அது ஏதுவாக இருக்கும். இவற்றுடன், நீண்ட கூந்தலை முடிந்து கட்டிக்கொள்ள வேண்டும். பாதுகாப்புக் கண்ணாடிகளையும் அணிந்துகொள்ளலாம்.
பாதுகாப்பும் முக்கியம்: தீபாவளி அன்று சற்றே கவனக்குறைவு ஏற்பட்டாலோ சாகச எண்ணம் குடிபுகுந்தாலோ, இன்பம் நிறைந்த இந்தத் திருநாள், துன்பம் வந்துசேரக் காரணமாகி விடும். தீபாவளிக்குப் புத்தாடைகளும் பரிசு களும் இனிப்புகளும் பட்டாசுகளும் மட்டும் முக்கியமல்ல; பாதுகாப்பும் முக்கியம். பட்டாசு ஆபத்தானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். பண்டிகைக் கொண்டாட்டங் களுக்காக வெடிக்கப்படும் பட்டாசுகள், பேராபத்துக்கான காரணியாக மாறிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தால், அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளியாக அமையும். - டாக்டர் எஸ். பகவத் குமார்,
drsbkumar@gmail.com