

உச்சி முதல் உள்ளங்கால்வரை உடல்நலம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்த ஒரே ‘ ஆப்’ தீர்வு சொல்கிறது. உடல் பருமனைக் குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும், தோலைச் சிறப்பாகப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும், கூந்தலைப் பாதுகாத்துப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும், உடல்நலப் பராமரிப்பை எப்படி மேற்கொள்ள வேண்டும் என உடல்நலம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்த ‘ஆப்‘ வழிகாட்டுகிறது.
மருத்துவக் குறிப்புகள் முதல் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள்வரை அனைத்தும் இதில் கிடைக்கின்றன. உடல் எடையைக் குறைக்கக் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பட்டியல், தோல் பராமரிப்புக் குறிப்புகள், வயிற்றுவலி, தலைவலி, முதுகுவலி போன்ற பொது உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று அனைத்துமே இதில் கிடைக்கிறது. கையடக்க மருத்துவ ஆலோசகர் என்று இதைக் கூறலாம்.
- விஜயஷாலினி