நூல் அறிமுகம்: நெஞ்செரிச்சலுக்குத் தீர்வளிக்கும் நூல்

நூல் அறிமுகம்: நெஞ்செரிச்சலுக்குத் தீர்வளிக்கும் நூல்
Updated on
1 min read

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரின் உணவு முறையும் மாறிவிட்டது. இதன் காரணமாக பலரையும் பாதிக்கும் ஒன்றாக நெஞ்செரிச்சல் இருக்கிறது.

இனிப்பு, காரம், மசாலா, கொழுப்பு போன்றவற்றில் ஒன்று மிகுந்துள்ள உணவைச் சாப்பிட்ட பிறகு வயிற்றில் எரியும் உணர்வையோ, சத்தத்தையோ நாம் உணர்ந்தால், அதற்கு நெஞ்செரிச்சலே காரணமாக இருக்கும். ‘சாதாரணத் தொந்தரவுதானே!’ என்று இதை அலட்சியப்படுத்தவிடக் கூடாது. அடிக்கடி நெஞ்செரிச்சல் நீடித்தால், அது பெரிய நோயில் முடியக்கூடிய ஆபத்தும் உண்டு.

நெஞ்செரிச்சலுக்கான தீர்வுகள் எளிமையானவை. வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றை மறுசீரமைப்பதன் மூலம் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட முடியும் என்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான நிகில் சௌத்ரி. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அவர் எழுதியிருக்கும் புத்தகமே ’தி பர்னிங் சொல்யூஷன்’.

இந்தப் புத்தகத்தில் நிகில் விவாதிக்கும் இயற்கை உணவு நுட்பங்கள் அறிவியல் அடிப்படையில் அமைந்தவையாக உள்ளன. நிகில் சௌத்ரியின் ஆலோசனையால் பயனடைந்தவர்கள், அவற்றைப் பின்பற்றத் தொடங்கிய முதல் வாரத்திலேயே நெஞ்செரிச்சலுக்கு மருந்துகள் தேவைப்படாத நிலைக்கு மேம்பட்டதாகக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

நாம் எடுத்துக்கொள்ளும் எந்த சிகிச்சையாக இருந்தாலும் அதற்குப் பக்கவிளைவாக நெஞ்செரிச்சல் ஏற்படும். அதற்கு இணையத்தில் கூறப்படும் தீர்வுகள் நீண்ட காலத்துக்குப் பயனளிக்காது. அறிவியல் அடிப்படையில், அனுபவத்தின் துணையோடு எழுதப்படும் இது போன்ற புத்தகங்களே தீர்வை அளிக்கும்.

’தி பர்னிங் சொல்யூஷன்’, நிகில் சௌத்ரி, Notion Press, தொடர்புக்கு: 044 4631 5631

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in