Published : 26 Mar 2016 12:06 PM
Last Updated : 26 Mar 2016 12:06 PM

மூளைக்கு உத்வேகம் தரும் லவங்கப்பட்டை

பிரியாணி, குருமாவில் எல்லாம் போடுவார்களே லவங்கப்பட்டை. அது வெறும் வாசத்துக்குச் சேர்ப்பது என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது தரும் ஆரோக்கியப் பலன்கள் அதிகம்.

* லவங்க மரத்தின் உள்பட்டை உரித்தெடுக்கப்பட்டு, லவங்கப்பட்டையாக நமக்குக் கிடைக்கிறது.

* பொதுவாக வாசனைக்காகச் சேர்க்கப்பட்டாலும் நொறுக்குத்தீனிகள், இனிப்பு போன்றவற்றிலும் இதைச் சேர்க்கலாம்.

* சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மாதவிடாய் தசைப்பிடிப்புகள் போன்றவற்றுக்குக் குணமளிக்கப் பயன்படுத்தலாம்.

* நல்ல வாசனை கொண்ட லவங்கப்பட்டை குச்சிகள் மூளை உழைப்புக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

* லவங்கப்பட்டையைப் பொடியாக்கி, தேநீரில் கலந்து குடிக்கலாம்.

* லவங்கப்பட்டையில் மாங்கனீஸ், துத்தநாகம், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்ற கனிமச் சத்துகள் உள்ளன.

- நேயா





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x