மில்கி மிஸ்ட்டின் புரோபயாட்டிக் தயிர்

மில்கி மிஸ்ட்டின் புரோபயாட்டிக் தயிர்
Updated on
1 min read

பால் நிறுவனமான மில்கி மிஸ்ட், புரோபயாட்டிக் தயிரை அறிமுகப்படுத்தி யுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்செரிமானத்துக்கும் உதவும். இந்தத் தயிரில் பிபி 12 - பிஃபிடோபாக்டீரியம் அனிமலிஸ் துணையினம் உள்ளது.

“குடல் சுகாதார நன்மைக்கு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதிலும் புரோபயாடிக் முக்கியப் பங்காற்றுகிறது. மிருதுவாக்கியாகவும்சாலட், பிற சமையல் வகைகளில் இந்த புரோபயாடிக் தயிரைச் சேர்க்கலாம். ஒவ்வொரு 100 கிராம் புரோபயாட்டிக் தயிரிலும் 1௦௦ கோடி நேரடி பாக்டீரியாக்கள் உள்ளன” என்கிறார் மில்கி மிஸ்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கே.ரத்னம்.

புரோபயாடிக் அறிவியல் விளக்கம்

Mikkel Jungersen et al (2014) ஆராய்ச்சி அறிக்கையின்படி , பிபி -12, குடல் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், வயிற்றுப்போக்குக்கு எதிராகப் பாதுகாப்பைத் தருவதுடன், பொதுவான சுவாச நோய்த்தொற்றுகளுக்கு உடலின் எதிர்ப்பை அதிகரிப்பதோடு, கடுமையான சுவாசக் குழாய் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

பிபி -12 அமெரிக்க உணவு - மருந்து நிர்வாகத்தால் (எஃப்.டி.ஏ) அங்கீகரிக்கப்பட்ட (ஜி.ஆர்.ஏ.எஸ்) அந்தஸ்தையும், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தால் (ஈ.எஃப்.எஸ்.ஏ) தகுதி வாய்ந்த பாதுகாப்பு (கியூ.பி.எஸ்) அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

சாமானியரும் வாங்கக்கூடிய விலையில் 400 கிராம் தயிர் ரூ. 58-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களிலும் சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தயிர் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in