ஆழ்ந்த உறக்கத்துக்கு சப்போட்டா சாப்பிடுங்கள்

ஆழ்ந்த உறக்கத்துக்கு சப்போட்டா சாப்பிடுங்கள்
Updated on
1 min read

நம்மில் பலருக்கும் சாப்பிடுவதற்கு ஆர்வத்தைத் தூண்டாத பழங்களில் சப்போட்டாவும் ஒன்று. ஆனால் இனிப்பான, சதைப்பற்று கொண்ட இந்தப் பழம் உடல்நலனுக்கு ரொம்பவும் நல்லது.

சிலருக்குச் சப்போட்டா பழத்தை மட்டும் தனியாகச் சாப்பிடுவதற்குப் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் சிறிதளவு வாழைப்பழம், மாம்பழத்துடன் சேர்த்துச் சப்போட்டாவைச் சாப்பிடுவதன் மூலம் முக்கனிகளின் சத்தையும் ஒருங்கே பெறமுடியும்.

என்ன இருக்கிறது?

l சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிகம்.

l சப்போட்டாவில் வைட்டமின் 'ஏ'வும், 'சி'யும் இருக்கிறது.

l சப்போட்டாவில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து இருக்கிறது.

l ரத்த இழப்பை ஈடுகட்டவும் சப்போட்டா உதவும். சப்போட்டாவைப் பழரசமாகவோ அல்லது சாலடாகவோ சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

l இந்தப் பழத்தில் உள்ள எளிய சர்க்கரை, உடலுக்குத் தேவையான இயற்கை சக்திக்கு உத்வேகம் அளிக்கும்.

l சப்போட்டா இலைகள் நம் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்துக் காயங்களைக் குணப்படுத்தும்.

அளிக்கும் பலன்கள்

l சப்போட்டாவின் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் பொருமல், வலி போன்ற உபாதைகள் நீங்கும்.

l உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் நாள்தோறும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் கரையும் என்கின்றனர் நிபுணர்கள்.

l வயிற்றில் நாள்பட்ட புண், குடல் புண் போன்ற உபாதைகளால் சிரமப்படுபவர்கள் சப்போட்டா சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.

l சப்போட்டாவுடன் சிறிது பால் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உடல்சூடு பிரச்சினையைச் சரிசெய்யலாம். தூக்கக் கோளாறு பிரச்சினைகளுக்கும் சப்போட்டா பழம் பயனளிக்கும்.

l சப்போட்டாவில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் நிறைந்துள்ள தால் பித்த மயக்கம், சோர்வு, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

l எலும்புகளை வலுப்படுத்துதல், சருமத்தின் வறட்டு தன்மையைப் போக்குதல் போன்ற நன்மைகளும் சப்போட்டா பழத்தினால் கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in