

# நாள் ஒன்றில் 30 நிமிட நடைப்பயிற்சி உடல் தகுதியை (Fitness) தக்கவைக்கப் போதுமானது.
# ஒரு வாரத்தில் 3 நாட்கள் 50 நிமிட நடைப்பயிற்சி, உடல் நலம் குறையும் நாட்களைப் பாதியாகக் குறைக்கிறது.
# எல்லா பயிற்சியும் எல்லோருக்கும் பொருந்தாது. எனவே, வசதிக்குத் தகுந்த உடற்பயிற்சிகளை முறையான வழிகாட்டிகளைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும்.
சிந்தனையின் ஆற்றலை சர்வாதிகாரத்தால் ஒருபோதும் தோற்றகடிக்க முடியாது.
- ஹெலன் கெல்லர்
சிறுநீர்த் தாரைத் தொற்றுத் தாக்கத்துக்கு (Urinary Trackt Infection) வாழைத் தண்டு, வாழைப்பூ, வெள்ளரி, பார்லி கஞ்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டு தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. கிருமிகளால் சிறுநீரகப் பாதை தாக்காதிருக்க இவை உதவும்.
புதினாவை ஆய்ந்து, அரைத்து ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர காலை நேரப் பித்த மயக்கம், தலைவலி, காய்ச்சல் சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்பு, வயிறு, குடல் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்.
# கரோனா தொற்று இந்தியாவின் மருந்து ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி உள்ளது. தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பாரசெடமால், எரித்ரோமைசின் உள்ளிட்ட 12 மருந்துகளின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களில் 70 சதவீதம் சீனாவில் இருந்தே வருவதால், கரோனா தொற்றின் காரணமாக அங்குள்ள மருந்து ஆலைகள் வாரக் கணக்கில் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
# இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி. அப்போதைய பம்பாய் மாகாணத்திலிருந்து, அமெரிக்காவுக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் அலோபதி மருத்துவம் படித்து பட்டதாரியான முதல் பெண் இவர்தான். ஆனந்திபாய் ஜோஷி, ஆனந்தி கோபால் ஜோஷி என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.