அஜீரணம் நீங்க

அஜீரணம் நீங்க
Updated on
2 min read

கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் சரியாகும்; சுக்கு, சீரகம், ஓமம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் துவையல் போன்று அரைத்துச் சாப்பிட்டாலும் அஜீரணக் கோளாறு நீங்கும்.

முளைகட்டிய தானியங்களில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. கொண்டைக் கடலையை 8 முதல் 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின்பு வடிகட்டி, ஈரத்துணியில் வைத்துக் கட்டினால், முளைகட்டிய கொண்டைக் கடலை உருவாகும். கடும் உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் தங்கள் ஆற்றல் அளவு குறையாமல் இருப்பதற்கு இதைத் தொடர்ந்து உட்கொள்ளலாம்.

தொகுப்பு: அபி

இன்று உன்னால் முடிந்தவரை ஒரு செயலை நன்றாகச் செய்; நாளை அதனினும் நன்றாகச் செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்.

- ஐசக் நியூட்டன்

தொற்றா நோய்களால் 2030-ல் சுமார் ரூபாய் 255 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறை கொண்டுவரும் நோய்களால், உலகில் ஒவ்வொரு 1.3 விநாடிகளுக்கும் ஒருவர் இறக்கிறார்.

தொற்றா நோய்கள் உடல்நலத்தை மட்டும் பாதிப்பதில்லை. உற்பத்தியைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன.

இந்தியாவில் சுமார் 60 சதவீத இறப்பு இதய நோய், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

தொற்றா நோய்களால் ஆண்டுதோறும் 4.1 கோடிப் பேர் உலகம் முழுவதும் இறக்கின்றனர். இது உலகளாவிய மரணங்களில்
71 சதவீதம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in