குழந்தை நலத்துக்கான முதன்மைப் புத்தகம்

குழந்தை நலத்துக்கான முதன்மைப் புத்தகம்
Updated on
1 min read

ச.ச.சிவசங்கர்

இந்தியாவில் குழந்தை அறுவை சிகிச்சை குறித்த ஆய்வின் முன்னோடி எனப் பேராசிரியர் எம்.எஸ். ராமகிருஷ்ணனைச் சொல்லலாம். குழந்தை அறுவை சிகிச்சைப் பாடநூல் தயாரிப்புக் குழுவில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவில், தற்போது வளர்ச்சியடைந்திருக்கும் குழந்தைகள் நல மருத்துவத்துக்கு அடித்தளமிட்டவர் அவர். இவருடைய ‘M.S.Ramakrishnan's essential of pediatric surgery’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது.

குழந்தை மருத்துவத்தின் முன்னோடி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிறந்தவர் எம்.எஸ். ராமகிருஷ்ணன். சென்னையில் உள்ள குழந்தைகளுக்கான சுகாதார நிறுவனத்தில் அறுவை சிகிச்சைத் துறையில் விரிவுரையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று குழந்தை மருத்துவத் துறையில் தவிர்க்க முடியாத நபராக விளங்குகிறார்.

1966-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக M.Ch. எனும் பயிற்சி திட்டத்தை அவர் தொடங்கினார். இந்தியாவின் குழந்தை அறுவை சிகிச்சைத் துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். நோய் ஏற்பட்ட குழந்தைகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தனது பணி ஓய்வுக்குப் பின் Child’s Trust மருத்துவமனையை உருவாக்கியதில் இவர் ஆற்றிய பங்கு போற்றுதலுக்குரியது.

மேம்பட்ட புத்தகம்

குழந்தை மருத்துவத் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் சேவைகளையும் செய்துள்ள எம்.எஸ்.ராமகிருஷ்ணன், ஆசிரியர், மருத்துவர் எனப் பல தளங்களில் செயல்படுகிறார். இவரது பணி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியக் குழந்தை அறுவை சிகிச்சையின் முன்னோடியான இவர் தேசிய, சர்வதேச அளவில் குழந்தை அறுவை சிகிச்சை குறித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய புத்தகம் 1991-ம் ஆண்டு இவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது. 28 ஆண்டுகள் கழித்து அந்தப் புத்தகம் மேம்படுத்தப்பட்டு வெளியாகி உள்ளது. அவருடைய மாணவர்கள், தற்போது இருக்கும் முக்கிய மருத்துவர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலர் தங்களது பங்களிப்பின் மூலம் அந்தப் புத்தகத்தை மெருகேற்றியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in