

- டாக்டர் சி. அசோக்
மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
# பதற்றமடைய வேண்டாம், நோயாளியையும் பதற வைக்காதீர்கள். இது பிரச்சினையை அதிகப்படுத்தும்.
# உடனடியாகக் கொடுக்க வேண்டிய லோடிங் டோஸ் (Loading dose) மருந்துகளை அவசியம் ஒவ்வொருவர் வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். மயக்கம் அடைந்திருந்தால், தெரிந்தால் மட்டும் முதலுதவி செய்ய வேண்டும்.
# ஒரு வேளை சுவாசம் இல்லாமல், நாடித்துடிப்பும் இல்லாமல் இருப்பது தெரிந்தால் நின்ற இதயத்தை செயல்படுத்தும் முதலுதவி செய்ய வேண்டும் (CPR – Cardiopulmonary Resuscitation). பிறகு அனைத்து வசதிகளையும் கொண்ட அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டும்
# ஒருவேளை கடுமையான நெஞ்சு வலியுடன் நினைவும் இருந்தால் நீங்களாகவே வாகனத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனை செல்லாதீர்கள், துணையே இல்லாத நிலை ஏற்பட்டால் ஒழிய.
# எப்பொழுதும் நீங்கள் எடுக்கும் மருந்துகளின் பெயர்கள், அவசரக் காலத்தில் அழைக்கவேண்டிய மருத்துவர், குடும்ப உறுப்பினர்களின் கைபேசி எண்களை வைத்திருங்கள்
# இரவில் கழிவறை சென்றால் கதவைத் தாழிடாதீர்கள்
# மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களில் முறையாகப் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்
லோடிங் டோஸ்
# மாரடைப்புக்கான அறிகுறிகள் தெரிந்த உடன் உடனே எடுத்துக்கொள்ள வேண்டும்.
# எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டும்
# குறிப்பாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்களும், அதிக ரத்தஅழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால், உடற்பருமன், மற்ற இதய நோய் கொண்டவர்களும்
மாரடைப்பு வராமல் இருக்க
# வாழ்க்கை முறை மாற்றம்
# தினமும் முறையான உடற்பயிற்சி
# புகையிலைப் பயன்பாடு தவிர்ப்பு
# சிகரெட் குடிப்பதை நிறுத்த வேண்டும்
# உயரத்துக்கு ஏற்ப உடல் எடையை சீராகப் பராமரிக்க வேண்டும்
# ஆண்டுக்கு ஒரு முறை இதய நோய் சார்ந்த பரிசோதனை (Cardiac Master Health check up) செய்துகொள்ள வேண்டும்
# மன உளைச்சல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – யோகா, தியானப் பயிற்சிகள் இதற்கு உதவும்.
# நீரிழிவு நோய், நாள்பட்ட வியாதிகள் இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறை
# நம் மண்ணில் விளைந்த பருவ காலத்துக்கு ஏற்ற பழங்கள், காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 25 – 50 கிராம் நார்ச்சத்து உணவு தேவை.
# ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு வகைகள் மிகவும் முக்கியம்.
# அசைவ உணவு, பால், பால் சார்ந்த உணவை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும்.
# அதிக அளவு கொட்டை, பருப்பு வகைகளை உண்ண வேண்டும்.
# ஆளிவிதை (Flax Seed), பாதாம், வால்நட், பூசணி விதை ஆகியவற்றை உணவில் அளவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்
மாரடைப்பு என்னும் பயங்கரவாதம் உங்கள் வீட்டில் நடக்காமல் இருக்க, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனையை செய்துகொள்ளுங்கள். ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் மாதம் ஒன்று அல்லது இரு முறை பரிசோதித்துக்கொள்வது, முறையான உடற்பயிற்சி, உணவு எடுப்பது வருமுன் காக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
என்னென்ன மருந்துகள்?
# Asprin (கடித்து மென்று விழுங்க வேண்டும்)
# Clopidogrel
# Atrovastin
# Sorbitrate (வலி வந்தால் நாவின் அடியில் வைக்க வேண்டும்)
மருந்துகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடன் கூடுதலாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்
மாரடைப்பைத் தவிர்க்க
மாரடைப்பைத் தவிர்க்க, கீழ்வரும் 5 அம்சங்களை நினைவில் கொண்டு கடைப் பிடிக்க வேண்டும்:
* உடற்பயிற்சி / யோகா * உணவுக் கட்டுப்பாடு * மது/சிகரெட்/ புகையிலை தவிர்த்தல் * மன உளைச்சல் தவிர்த்தல் * ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல்பரிசோதனை
கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com