

# இரைப்பையின் உட்சுவர் செல்கள் சில நாட்கள்தான் இருக்கும். புதிய செல்கள் மீண்டும், மீண்டும் உருவாகிக்கொண்டே இருக்கும். இவ்வாறு இரைப்பை செல்கள் முற்றிலுமாக 2 வாரத்துக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும்.
# சிறுகுடலிலுள்ள உட்சுவரில், நாம் உட்கொண்டு ஜீரண மடைந்த உணவுச் சத்துகளை உறிஞ்ச விரல் போன்ற அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் 3,000 உறிஞ்சும் விரல் நுனிகள் இருக்கும்.
# சிறுகுடலின் விட்டம் 2 அங்குலம். அதன் நீளம் சுமார் 22 அடி.
# நமது வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் முழுவதையும் ஒன்றாக நீட்டினால் 10 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். அதாவது 33 அடி!
# முன் உணவுக் குழலின் நீளம் 25 செ.மீ. ஆகும்.
# நமது குடலின் மொத்தப் பரப்பளவு 656 சதுர. அடி (200 மீட்டர்).
# ஒரே நேரத்தில் நமது இரைப்பை 2 லிட்டர் அளவுக்கு உணவு, நீரை அடக்கும் கொள்ளளவு கொண்டதாக இருக்கும்.
# சராசரியாக மனித இரைப்பை ஒரு வருடத்தில் 500 கிலோ உணவை ஜீரணிக்கும் தன்மை கொண்டிருக்கும்.
# தினந்தோறும் வாயில் சுரக்கும் உமிழ் நீரின் அளவு 1 முதல் 1.5 லிட்டர்.
# நாம் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கத் தினமும் நமது உடலில் மொத்தம் சுரக்கும் ஜீரண நீரின் அளவு சுமார் 7 லிட்டர்.
# நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெறப்பட்ட குளூக்கோஸ் நமது உடலில் சிதைந்து சக்தி தருவதற்குச் சுமார் 50 வேதிவினைகள் நடைபெற்றாக வேண்டும்.
# நமது கல்லீரல் 600 வகையான வேலைகளை உடலில் செய்கிறது.
கல்லீரலில் சுமார் 1 லட்சம் நுட்பமான செல்கள் இருக்கின்றன.
# நீண்ட காலம் உயிர் வாழும் செல்கள் கல்லீரல் செல்கள்.
# மனித ஜீரண மண்டலத்திலிருந்து தினமும் 1 பைன்ட் (500 மி.லி.) வாயு வெளியேறுகிறது. இதில் பெரும்பாலான வாயு, வாயின் வழியாக உட்கிரகிக்கப்பட்டது. மீதியுள்ளது, உணவு ஜீரணமடையும்போது வெளிப்படுபவை.
# ஒரு மனிதன் ஓர் உருண்டை உணவை விழுங்கிவிட்டுத் தலைகீழாய் நின்றால்கூட அந்த உணவு வாய் வழியாகத் திரும்பி வருவதில்லை. அது இரைப்பையை அடைந்துவிடும். ஏனென்றால் மேற்குடலிலுள்ள தசைகள், விழுங்கிய உணவைப் படிப்படியாக ஓர் அலை போல இரைப்பையை நோக்கிச் செலுத்துகின்றன.