

எச்சில் எங்கிருந்து ஊறுகிறது. அதில் என்னென்ன இருக்கும்?
எச்சில் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் நீர்த்தன்மை வாய்ந்த திரவம்தான் எச்சில். முகத்தின் இரண்டு பக்கமும் உள்ள தாடைகளில் இச்சுரப்பிகள் உள்ளன. எச்சிலில் 99.5 சதவீதம் இருப்பது நீர்தான். மிச்சம் இருப்பது அமிலேஸ் என்சைம். நாம் சாப்பிடும் மாவுச்சத்து உணவைச் சர்க்கரையாக மாற்றுவது இதுதான்.
ஆரோக்கியம் தொடர்பாக நாம் வைத்திருக்கும் தவறான கருத்துகள் யாவை?
நம்மிடையே நிறைய தவறான கருத்துகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்குச் சில: ஒரு குழந்தைக்கு உடல்நலம் குன்றிப் போனால் உடனடியாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தேவை. மருத்துவமனைகள் பாதுகாப்பும் சுத்தமும் மிக்கவை. எல்லா புற்றுநோய்க்கும் தீர்வு விரைவில் கண்டுபிடிக்கப்படும்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எப்படிப்பட்ட உணர்வுநிலை அவசியம்?
ஒவ்வொரு நாளும் திருப்தியுணர்வுடன் இருப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முதன்மைப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்றாடம் காலை எழுந்தவுடன் உங்களுக்குக் கிடைத்துள்ள நல்ல விஷயங்களை ஒரு முறை நினைத்துப் பார்த்துவிட்டு, அந்த நாளைத் தொடங்குங்கள்.