

அதிக தடவை உணவு உட்கொள்வதைச் சுவிங்கம் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் சாப்பிடும் வேளையில் அதிக உணவு உட்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிங்கம் மெல்லுபவர்கள் இயற்கையான பழங்களைவிட, சத்தற்ற உணவையே அதிகம் விரும்புகின்றனர்.
பூண்டு சாப்பிடுவதால் தீய விளைவுகள் ஏதாவது உண்டா?
பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீங்கள் ரத்தத்தை இளக்கும் மாத்திரையை உட்கொள்பவராக இருந்தால், பூண்டைச் சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். பூண்டுக்கு ரத்தத்தை இளக்கும் தன்மை உண்டு.
உடல் பருமனுக்கும் மரணத்துக்கும் உள்ள நேரடித் தொடர்பு என்ன?
டைப் 2 வகை நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆகியவை நேரடியாக உடல் பருமனுடன் தொடர்புடையவை. அமெரிக்காவில் நிகழும் ஐந்து மரணங்களில் ஒன்று உடல் பருமனால் ஏற்படுகிறது.