

புற்றுநோய் பாதித்த வறியவர்களின் சிகிச்சைக்கு உதவும் வகையில் தொலைக்காட்சி மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் `ராப்ஸடி’ என்னும் கலை நிகழ்ச்சியை தேன்மொழி நினைவு அறக்கட்டளை சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கத்தில் இன்றைக்கு நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்முறை சாராத கலைஞர்களும் தொழில்முறைக் கலைஞர்களும் பங்கேற்க இருக்கின்றனர். ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் கலையரசன், நடிகை ஜனனி அய்யர், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியைக் காண்பதற்கு வருவதன்மூலம் புற்றுநோயை எதிர்க்கும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கும்.