ரத்த அழுத்தம், நம் கட்டுப்பாட்டில்

ரத்த அழுத்தம், நம் கட்டுப்பாட்டில்
Updated on
1 min read

ரத்த அழுத்தத்தைச் சரிசெய்வதில் வெள்ளைப்பூண்டு எந்தளவுக்கு உதவியாக இருக்கும்?

பூண்டில் உள்ள மருந்துப் பொருளான அலிசினை தினசரிப் பத்து மில்லிகிராம் வீதம் உட்கொண்டால் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்தஅழுத்தம், ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களில் முறையே ஐந்து மற்றும் பத்து புள்ளிகள் அளவுக்குக் குறையும்.

டென்னிஸ் பந்தைக் கையால் அமுக்குவதால் ரத்த அழுத்தம் குறையுமா?

இது ஐசோமெட்ரிக் பயிற்சி. 5 முதல் 19 புள்ளிகள் வரை ரத்த அழுத்தம் குறையும். 90 விநாடிகளுக்கு மிதமாகப் பந்தைக் கையில் வைத்து அமுக்க வேண்டும், பிறகு கையை மாற்றவும். இதை மூன்று முறை செய்யவும்.

ஒரு வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து தடவை இப்பயிற்சியைச் செய்யவும். ஆறு முதல் எட்டு வாரங்கள் செய்துவந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

காபி அருந்துவதை நிறுத்துவதால் ரத்த அழுத்தம் குறையுமா?

காலையில் ஒரு குவளை காபி அருந்தினால் ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரிக்கிறது என்று டியூக் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது குவளை காபியால் ஐந்து மடங்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் ஐந்து புள்ளிகள் அதிகரிக்கின்றன. காபியையும் சிகரெட்டையும் நிறுத்துவதால் ரத்த அழுத்தம் 20 புள்ளிகள் குறைகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in