

1. வயிற்றுக் கடுப்பைப் பால் சாப்பிடு வதன் மூலம் கட்டுப்படுத்த இயலுமா?
இது ஒரு தவறான நம்பிக்கைதான். பால் குடிப்பதால் வயிற்றுக் கடுப்பு தற்காலிகமாகக் குறைவது போன்று உணர்வது போலித் தோற்றமே. ஆனால், உட்கொள்ளும் பால் வயிற்றில் கூடுதலாக அமிலச் சுரப்பை ஏற்படுத்திப் பிரச்சினையை அதிகப்படுத்தவே செய்யும் என்றே ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
2. அழகு சாதனப் பொருட்களில் எவையெல்லாம் தீங்கை ஏற்படுத்துபவை?
உலகம் முழுவதும் 70 ஆயிரம் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஆண்டுதோறும் புதிதாக ஆயிரம் வேதிப்பொருட்கள் இவற்றின் உற்பத்தி நடைமுறையில் சேர்க்கப்படுகின்றன. இந்த ஆயிரத்தில் 900 வேதிப்பொருட்கள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை என்கின்றன ஆய்வுகள். இனி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
3. எவ்வளவு நேரம் பல்தேய்க்க வேண்டும்?
உங்கள் பற்களை முழுவதும் சுத்தமாக பிரஷ் செய்வதற்குக் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொள்ளுங்கள். பற்கள், ஈறுகளின் அனைத்துப் பகுதிகளையும் அழுத்தமாக அல்லாமல், மென்மையாக, மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். அப்போதுதான் அழுக்கு வெளியேறும், பற்களும் சீக்கிரம் தேயாது.