Last Updated : 27 Dec, 2014 12:50 PM

 

Published : 27 Dec 2014 12:50 PM
Last Updated : 27 Dec 2014 12:50 PM

மூக்கடைப்பைப் போக்கும் வழி

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடிக்கடிச் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளால் மனிதர்களின் ஆயுள் கூடுகிறதா?

ஆமாம். சமூகக் கூடுகைகள் மனித உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேராமல் தனிமையில் இருக்கும் ஆண்களில் 20 சதவீதம் பேர் தங்கள் சகாக்களைவிட, சீக்கிரமே இதய நோய் மற்றும் புற்றுநோய் காரணமாக இறக்கின்றனர்.

குடும்பமாகச் சேர்ந்து உணவு உண்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

தினசரி குடும்பத்துடன் சாப்பிடும் சூழலைக் கொண்ட வளரிளம் பருவத்துப் பிள்ளைகள், பள்ளியில் மற்றவர்களைவிட நன்றாகப் படிக்கிறார்கள். அவர்களில் 50 சதவீதம் பேரிடம் மது அருந்துவது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. மனஅழுத்தத்தாலும் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

நாய்கள் வளர்ப்பது தனிமையைக் குறைக்குமா?

ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வு இதை ஒப்புக்கொள்கிறது. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களைச் செல்ல நாயுடன் கழிப்பவர்கள், மற்றவர்களைவிடத் தனிமை உணர்வைக் குறைவாகவே அடைகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவாக எத்தனை டி.என்.ஏக்கள் உள்ளன?

நீண்ட கைகள் தொடங்கி வால் தவிர்த்த உடல் வரை நாம் எல்லா வகையிலும் குரங்குகளை ஒத்திருக்கிறோம். நமது பழக்கவழக்கங்களிலும் பெரிய வித்தியாசமும் இல்லை. குரங்குகளின் மரபணுக்களில் உள்ள 96 சதவீதம் டி.என்.ஏக்கள் மனிதனிடமும் உள்ளன.

மூக்கடைப்பைத் தீர்ப்பதற்கு இயற்கையான வழிமுறை இருக்கிறதா?

இளஞ்சூடு உள்ள நீரை ஒரு கோப்பையில் பிடித்துக் கால் தேக்கரண்டி உப்பைப் போடுங்கள். வாய் கொப்பளிக்கும் பேசின் முன் நின்றுகொண்டு மூக்கின் இரண்டு துளைகளுக்குள் தண்ணீரை உறிஞ்சுங்கள். தண்ணீரை மூக்கின் வழியாகவும் வாய் வழியாகவும் வெளியேற்றுங்கள். இதைக் காலையிலும் இரவிலும் செய்யுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x