

உறக்கமின்மையில் (Insomnia) உறங்குவதற்கான முயற்சி, தரமான உறக்கம், போதிய நேரம் உறங்குதல் போன்றவை 85 சதவீதம் குறைந்துபோவதாக அமெரிக்க உளவியல் அமைப்பு தெரிவிக்கிறது.
போதிய அளவு தரமான உறக்கம் இல்லாவிட்டால் நடத்தையில் மாற்றம் ஏற்படலாம், தன் மீதோ அருகில் படுத்திருப்பவர்களிடமோ வன்முறையைப் பிரயோகிக்கலாம்.
நல்ல உறக்கத்துக்கான உணவு
* எளிதில் செரிமானமாகும் சத்தான சரிவிகித உணவே நம் தேர்வாக இருக்க வேண்டும்.
* பசும் பால், குறைந்த கொழுப்புடன் கூடிய தயிர் அல்லது மோர்
* குழம்பில் இட்ட கடல் மீன்
* ஆளி விதை, எள், பூசணி, சூரியகாந்தி ஆகியவற்றின் விதைகள்
* முந்திரி, கடலை, பாதாம், வால்நட் அளவாக நாள்தோறும்.
* தாது உப்புக்களும் வைட்டமின்களும் அடங்கிய தேன், பாலிஃபீனால் அதிகம் தாங்கிய கிரீன் டீ தினசரி உணவுப் பட்டியலில் இருக்கட்டும்.
* பழங்களும் நாட்டுக் காய்கறிகளும் எளிதில் செரிக்கும், செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும், மலச்சிக்கலை அகற்றும்.
* புரதம், கொழுப்பு கொண்ட உணவு இரவில் வேண்டாம்
* உணவு இடைவேளையில் முளையிட்டு வேகவைத்த பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, பச்சைக் காய்கறிக் கலவை, பழக்கலவை நம் தேர்வாக இருக்கட்டும்
* காய்கறி சூப், அசைவ சூப் நல்லது
* நொறுக்குத்தீனி, எண்ணெய்யில் பொரித்தது வேண்டாம். வெள்ளைச் சர்க்கரை, மைதா, துரித உணவு வகைகள் வேண்டவே வேண்டாம்.
ஆக மொத்தத்தில் இந்த உறக்கமின்மை பிரச்சினை முதுமையில் ‘விடாது கறுப்பு’ மாதிரி கூடவே வரும். இதற்கான காரணத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதற்கான சரியான தீர்வைக் கடைப்பிடித்தால் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளைச் சமாளித்த சார்லி சாப்ளின் சொன்னதுபோல, ‘இதுவும் கடந்து போகும்'.
தூக்கச் சிதைவின் வகைகள் # பொதுவான உறக்கமின்மை (Insomnia) # சுவாசப் பாதை, தொண்டை, குரல்வளை சார்ந்த பிரச்சினைகளால் வரும் உறக்கமின்மை (Sleep Apnea) # காலை அசைத்துக்கொண்டே இருக்கும் உறக்கமின்மை (Restless leg syndrome) # காலை எழுந்ததும் தலைவலியில் தொடங்கிப் பகல் முழுதும் தூங்கி வழியும் ஒருவகை தூக்கச் சிதைவு # உறக்கத்தை நிர்வகிக்கும் உயிர் வேதியல் சுழற்சியில் நடக்கும் குளறுபடி (Circadian Rhytham Disorders) # இயல்பான உறக்க நிலையின் நான்காம் நிலையில் வரும் உறக்கச் சிதைவு (REM Behavioural Disorder) |
உறக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் # பகலில் தூங்கி வழிதல் # அதிகச் சோர்வு # அடிக்கடி எரிச்சல், கோபம் # நடக்கும்போது தவறி விழலாம் # வாகனம் ஓட்டினால் விபத்தை ஏற்படுவதற்கான சாத்தியம் # கவனச்சிதறல் # மன உளைச்சல் # இரவு சரிவர உறங்க முடியாமல் விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது. |