ஓழுங்கான தூக்கம் எடை குறைய உதவும்

ஓழுங்கான தூக்கம் எடை குறைய உதவும்
Updated on
1 min read

எடை குறைய, டயட், உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே தேவையற்ற எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

முறையான தூக்கம் எப்படி எடையையும், இடையையும் குறைக்க உதவும் என்பதைப் பார்ப்போம்.

# இதனால் நீங்கள் அளவாக உண்பீர்கள்: தூக்கம் பசித்தன்மையை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும். தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட நேரிடும். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், சரியாகத் தூங்காத பெண்கள், முறையாகத் தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

# தொப்பையைக் குறைக்கும்: தொப்பை வர, கவலையும் மன அழுத்தமும் முக்கியக் காரணிகள். சரியாகத் தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.

# கொழுப்பு மரபணுக்களை கட்டுப்படுத்தும்: 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்கும் பெண்களை விட குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாகக் கூடுகிறது. ஏழு மணி நேரத்திற்குக் குறைவாகவோ, ஒன்பது மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள், மற்றவர்களைவிட, பருமனாகவும், எடை போடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

# ஆற்றல் கொடுக்கும்: இரவு நன்றாக உறங்கும்போது, அடுத்த ஒரு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in