உற்சாகம் தரும் உலர்பழங்கள்

உற்சாகம் தரும் உலர்பழங்கள்
Updated on
1 min read

உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.

உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கியத்தை அடையலாம்.

உலர் பழங்களில் உள்ள இனிப்பு தனித்துவமான சுவை கொண்டது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடல் சக்தி அதிகரிக்கும். உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை செளந்தர்யமாக்கக்கூடியவை. மலச்சிக்கலை போக்க வல்லது. அதுமட்டுமல்ல நினைவாற்றலையும் பெருக்கும். இதயத்திற்கும் நல்லது. உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in