

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் போலியோவுக்கு குட்-பை சொன்ன குழந்தை ஒன்று அனைவரையும் கவர்ந்தது.
ஆனால் இந்த குழந்தையின் வாழ்க்கையில் சோகம்தான் நிறைந்திருக்கிறது. அதன் பெயர் ஜெயஸ்ரீ (3).
கடலூர் மாவட்டம் விளாங் காட்டூரைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு உடல் வளர்ச்சி குறைவாக உள்ளது. ஒன்றரை அடி உயரமே உள்ள இவளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்தும் பலனில்லை. பணம் செலவழித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கவும் வசதியில்லை.
கடைசியாக ஊர் பெரியவர் ஒருவர் கூறிய ஆலோசனையின் பேரில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கு ஜெயஸ்ரீயை அழைத்து வந்துள்ளார் தாய் அம்சவள்ளி.
ஜெயஸ்ரீ செய்யும் குறும்புக்கு அளவே இல்லை. பாட்டு, நடனம், கிண்டல் இவளுக்கு கைவந்த கலையாக உள்ளது. போட் டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னால், பெரிய நடிகை களையே மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுக்கிறாள்.
மருத்துவமனைக்கு வந்த சில நாட்களிலேயே அங்குள்ள அனைவரின் மனதையும் கொள்ளை யடித்துள்ளார்.
அவ்வாறு மனதை பறிகொடுத்த சிலர் தரும் சொற்ப பணத்தைக் கொண்டு இவர்கள் ஜீவனம் நடக்கிறது.
பிறந்த 22ம் நாளிலேயே தந்தையை இழந்த இக்குழந்தை நலம்பெற நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
குழந்தையின் வருங்கால செலவினங்களுக்காக தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று குழந்தையின் தாய் வேண்டு கோள்விடுத்தார்.