Published : 07 Oct 2014 12:40 PM
Last Updated : 07 Oct 2014 12:40 PM

நகப் பராமரிப்பு: கவனம் தேவை

# நீளமாக நகம் வளர்க்க நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், அது முதலுக்கே மோசம் செய்துவிடக் கூடும். எவ்வளவு நீளமாக வளர்க்க ஆசைப்படுகிறீர்களோ, அவ்வளவு ஆபத்து. அதனால் அளவாக வளர்த்து வளமாக வாழுங்கள். கையால் சாப்பிடுவதற்கும் நீளமற்ற நகமே ஏற்றது.

# நகங்களை நீண்ட நேரத்துக்குத் தண்ணீரில் முக்கி வைத்திருக்காதீர்கள். நகங்கள் சீக்கிரமாக உடைந்து போக, அது வழிவகுக்கும்.

# உணவில் வைட்டமின் பி7 ஊட்டச்சத்தைச் சேர்த்துக்கொள்ளப் பாருங்கள். இது நகம் வளர உதவும்.

# நகங்களில் வெள்ளைத் திட்டுகள், கறைகளைப் போக்க எலுமிச்சை சாறைப் பயன்படுத்துங்கள். இது இயற்கையானது, நகங்களுக்குக் கேடு விளைவிக்காது.

# நீங்கள் நெயில் பாலிஷ் போடுவீர்களா? புதிதாக நெயில் பாலிஷ் போடுவதற்கு, பழசை அகற்ற ரிமூவர் பயன்படுத்துவீர்கள் இல்லையா? அப்படிப் பயன்படுத்தும்போது, அசிட்டோன் இல்லாததா என்று பார்த்து வாங்குங்கள். அசிட்டோன் உங்கள் நகங்களைப் பாதிக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x