விரல் நுனியில் உடல்நலம்

விரல் நுனியில் உடல்நலம்
Updated on
1 min read

எப்பொழுதும் எந்த நேரத்திலும் நம் உடல் நலனில் அக்கறை கொண்டு ஆலோசனை வழங்கவும் நேரா நேரத்துக்கு மாத்திரைகள் சாப்பிட நினைவுபடுத்தவும் ஒரு மருத்துவ ஆலோசகர் நம்முடனே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதுவும் நம் கையிலேயே ஒரு மருத்துவ ஆலோசகர் இருந்தால்…

இருக்கிறதே! நமது உடல்நலனுக்குக் கைகொடுக்கும் மொபைல் ‘ஆப்ஸ்’:

Drugs dictionary offline

இந்த ‘ஆப்’ஐ, கையடக்க மருத்துவப் புத்தகம் என்றே கூறலாம். ஏனென்றால், மருந்துகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த ஆப் மூலம் பெறலாம். உட்கொள்ள வேண்டிய மருந்துகளின் அளவு, அந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டிய வழிமுறை, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு, முன்னெச்சரிக்கைகள், சாப்பிடாமல் விட்டுப்போன மருந்துகளை நினைவுபடுத்துதல் என அனைத்துத் தகவல்களும், இதன்மூலம் நம் விரல்நுனியில் கிடைத்து விடுகின்றன. மருந்துகளின் பெயர் பட்டியல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த தகவலும் உண்டு. இந்த ‘ஆப்’பின் மற்றொரு சிறப்பம்சம், இணைய வசதி இல்லாமலும் இதைப் பயன்படுத்தலாம் என்பதுதான்.

- விஜயஷாலினி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in