

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சார்பில் தலைமுடி தான இயக்கம் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கவுள்ளது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரி (டபிள்யு.சி.சி.) சார்பில் கீமோதெரப்பி சிகிச்சையினால் முடியை இழக்கும் புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க டாங்கில்ட் எனும் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தலைமுடி தானம் இயக்கம் தொடங்கப்படுகிறது.
இதற்கு கிரீன் டிரெண்ட்ஸ் யுனிசெக்ஸ் ஹேர் ஸ்டைல் சலூன் ஆதரவு அளிக்கிறது. உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4-ம் தேதி, தலைமுடி தானம் இயக்கத்தை கல்லூரி முதல்வர் டாக்டர் ரிட்லிங் மார்க்ரெட் வாலர் தொடங்கி வைக்கிறார். சென்னையில் உள்ள அனைத்து கிரீன் டிரெண்ட்ஸ் சலூன்களிலும் இந்த இயக்கம் பிப்ரவரி 14 வரை 10 நாட்கள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் சலூன்களுக்கு வந்து தங்கள் தலைமுடியை தானமாக அளிக்கலாம். தலைமுடிகள் பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் கல்லூரியின் ரோடராக்ட் கிளப் பிரதிநிதிகளிடம் அளிக்கப்படும்.இந்த இயக்கம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும் மற்றும் தலைமுடி தானம் அளிக்கவும் 18004202020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.