வாசகர் பக்கம்: கொழுப்பைக் குறைக்கும் பயறு

வாசகர் பக்கம்: கொழுப்பைக் குறைக்கும் பயறு
Updated on
1 min read

உடலுக்குச் சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனியிடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம்.

சோளம்: உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

கோதுமை: நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.

வரகு: உடல் எடையை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளைத் தடுக்கும்.

கொண்டைக்கடலை: பக்கவாதநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

சோயாபீன்ஸ் : அனைத்து வைட்டமின் பி வகைகளும் உள்ளன. இவை இதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிக புரோட்டின், நார்ச்சத்து உள்ளதால் சோர்வடைந்த இதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. இயற்கையான ஆண்டி ஆகிசிடென்ட் நிறைந்தது. அதிக மினரல்கள் உள்ளன. உறுதியான எலும்புகள் உருவாகும். மெனோபாஸ் பிரச்சினைகளைத் தடுக்கும். உடம்பில் கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த குழாய்களுக்குள் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பச்சைபயறு: முளைகட்டிய பயிறு உடல் எடையை குறைக்கும். நோயாளிகளுக்கும் உகந்தது.

உளுந்து: ஆண்மையைப் பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கைச் சீராக்கும்

தட்டைப்பயறு: உடலில் புதிய செல்களை உருவாக்கத் தேவையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலில் அதிகக் கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு உடல் குண்டாகாமால் இருக்க உதவுகிறது.

கொள்ளு: கொழுப்பைக் கரைப்பதில் முதலிடம், உடலில் இருக்கும் தேவையற்ற தண்ணீரை எடுத்துவிடும். இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவிடும். வளரும் குழந்தைகள், உடற்பயிற்சி செய்வோருக்கு மிகவும் உகந்தது.

மூலநோய்க்கும், ரூமாட்டிசம் பிரச்சினைகளுக்கும், காய்ச்சலைக் கட்டுபடுத்த, இருமல் மற்றும் சளியை விரட்ட என கொள்ளு குணமாக்கும் பட்டியல் நீள்கிறது. வயிற்றுப்புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம்.

- சரஸ்வதி பஞ்சு, திருச்சி - 21.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in