வெள்ள பாதிப்பு: நோய்களும் அறிகுறிகளும்

வெள்ள பாதிப்பு: நோய்களும் அறிகுறிகளும்
Updated on
1 min read

சென்னையில் கொட்டித் தீர்த்த பெரு மழையாலும், குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளத்தாலும் நோய்கள் பரவுமோ என்ற பீதி சென்னை வாசிகளிடம் தொற்றியது. பல நாட்கள் வெள்ள நீர் தேங்கியதால் நீர் மூலம் பரவும் நோய்கள், கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள், மனிதர்கள் மூலம் பரவும் தொற்று நோய்களே இந்தப் பீதிக்கான காரணம். ஆனால், முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பயப்படுத்துவதற்கு ஒன்றுமே இல்லை.

பொதுவாகக் காய்ச்சல், குளிர்-நடுக்கம், தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவர்களைச் சந்திப்பது மிகவும் நல்லது. மேலும் அங்கீகாரம் பெற்ற ரத்தப் பரிசோதனை மையங்களில் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் நோய்க்கான சிகிச்சையை சரியாகப் பெறவும் முடியும். ஆனால், மிகவும் துல்லியமான சிகிச்சை பெற வேண்டுமெனில், முதலில் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். என்ன காரணத்தால் நோய் வந்தது என்பதுதான் அது. அதாவது நீர் மூலம் பரவிய தொற்று நோயா அல்லது கொசுக்கள் மூலம் பரவிய தொற்று நோயா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

நீர் மூலம் பரவும் நோய்கள்

l டைபாய்டு

l காலரா

l கல்லீரல் அழற்சி

l மஞ்சள் காமாலை

கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள்

l மலேரியா

l சிக்குன்குனியா

l டெங்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in