நீரிழிவைக் குறைக்கும் அரிசி!

நீரிழிவைக் குறைக்கும் அரிசி!
Updated on
1 min read

பழுப்பு அரிசி அல்லது பிரவுன் ரைஸ் எனப்படும் அரிசியின் மேல் உள்ள தவிட்டு உறை பாலிஷ் செய்து நீக்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. பழுப்பு அரிசிப் பயன்பாடு தற்போது அதிகரித்துவருகிறது. வாழ்க்கைமுறை சீர்கேடுகளால் பரவும் நோய்களுக்குத் தீர்வளிக்கும் தன்மை பழுப்பு அரிசிக்கு உண்டு. அது தரும் முக்கிய ஆரோக்கியப் பலன்கள் என்னென்ன?:

# பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம், இது செரிமானத்தைத் தூண்டுகிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பழுப்பு அரிசியை உட்கொள்ளலாம்.

# உடலில் உள்ள கொழுப்பு அளவை பழுப்பு அரிசி சீர்ப்படுத்தும். இதன் மூலம் இதயக் கோளாறுகளைத் தள்ளி வைக்கலாம்.

# பழுப்பு அரிசியில் உள்ள அதிக மாங்கனீசு சத்து, நரம்பு மண்டலத்தையும் இனப்பெருக்க உறுப்புகளையும் பலப்படுத்தக்கூடியது.

# பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்குப் பதிலாகப் பழுப்பு அரிசி, சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ரத்தச் சர்க்கரை அளவை நிலைப்படுத்துவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசியை மருத்துவர்கள் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேநேரம், இந்த அரிசியையும் அளவாகவே சாப்பிட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in