மூட்டு வலியைக் கட்டுப்படுத்தும் வழிகள்

மூட்டு வலியைக் கட்டுப்படுத்தும் வழிகள்
Updated on
2 min read

உலகம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட 9.6 சதவீத ஆண்களுக்கும் 18 சதவீத பெண் களுக்கும் ‘ஆஸ்டியோஆர்த்ரிட்டிஸ்’ அறிகுறிகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினை இருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு அன்றாட இயக்கத்தில் சிக்கல் இருக்கிறது. 25 சதவீதத்தினர், அன்றாட பணிகளைச் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இது இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் முடக்கவியல் பிரச்சினையாக இருக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்ட 45 சதவீத பெண்களிடம் மூட்டுவீக்க அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த மூட்டுவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில வழிகளை உலக சுகாதார மையம், தேசிய சுகாதாரத்துக்கான இணையதள அமைப்பு (NHP) ஆகியவை தெரிவித்திருக்கின்றன.

யோகா

மூட்டுகளையும் தசைகளையும் அசைப்பதற்கான பயிற்சிகளைச் செய்யலாம். மூட்டுகளில் வலி இருப்ப வர்களும் முதுகுத்தண்டில் பிரச்சினை இருப்பவர்களும் யோகா பயிற்சி செய்வது உதவிகரமாக இருக்கும்.

கீரை

பச்சைக்கீரைகளில் வைட்டமின் ‘கே’ ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் இடுப்பு எலும்புமுறிவு, எலும்பு அடர்த்தி அதிகரிப்பு, கால்சியம் சத்துக் குறைவு போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புகள் குறைவு. பச்சைக்கீரைகளை ‘சிட்ரஸ்’ நிறைந்த எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது உடல் ஊட்டச்சத்துகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

புரோபயாட்டிக்ஸ்

ஆரோக்கியமான குடல்நுண்ணுயிரிகள் ஆரோக்கியமான மூட்டுகளுக்கு வழி வகுக்கும். குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாவைத் தக்கவைக்க தயிர் (Yogurt), நொதிக்க வைக்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள் ளலாம். அத்துடன், புரோபயாட்டிக் துணை சத்து மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒத்தடம்

எலும்புகளில் வலி இருந்தால், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதற்கு முன், வெந்நீர் அல்லது குளிர்ந்தநீர் ஒத்தடம் கொடுக்கலாம். வலியுடன் வீக்கமும் இருந்தால், ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த நீரில் ஒத்தடம் கொடுப்பது வீக்கம், வலி இரண்டையும் குறைக்க உதவும்.

குளுட்டன் தவிர்ப்பு

பாக்கெட் உணவுகளில் சேர்க்கப்படும் கோதுமை சார்ந்த குளுட்டன் (Gluten) வீக்கத்தை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. அதனால், குளுட்டன் சேர்த்திருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது வலியைக் குறைப்பதுடன், எலும்புகளின் அசை வையும் அதிகப்படுத்தும்.

மஞ்சள்

மஞ்சளில் வீக்கத்தைக் கட்டுப் படுத்தும் கர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவும்.

அக்குபங்சர்

மூட்டுவலியைக் குறைக்க அக்குபங்சர் உதவுகிறது. எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து வலியையும் வீக்கத்தையும் குறைக்க அக்குபங்சர் உதவுவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இது வேண்டாம் என்றால், அக்குபிரஷர் முறையை முயன்று பார்க்கலாம். மூட்டுகளில் ரத்தஓட்டத்தை அதிகரிக்க அக்குபிரஷர் உதவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in