இரண்டு சதவீதம்தான் என்றாலும்

இரண்டு சதவீதம்தான் என்றாலும்
Updated on
1 min read

உடலில் இரண்டு சதவீதப் பங்கே மூளை இருந்தாலும் உடல் உட்கொள்ளும் ஆக்சிஜன், கலோரிகளில் 20 சதவீதத்தை மூளைதான் உட்கொள்கிறது. தலை, கழுத்துக்கு மட்டும் 15 தமனிகள் வேலை செய்கின்றன.

ஏலாதி

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நீதிநூல் ஏலாதி ஆகும். இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது.  இந்த நூலின் பாடல்கள் ஆறு கருத்துகளைக் கொண்டு ஒரு நெறியை உணர்த்துவதாக அமையும். மேற்கண்ட இம்மூன்று கூட்டு மருந்துகளும் சிறப்புடன் போற்றப்படுகின்ற மருந்துகளாகத் தமிழ் மருத்துவத்தில் இடம் பெறுவதாகும். இம்மருந்துகள் சித்த மருத்துவம், ஆயுர் வேதம் என்னும் இரண்டு மருத்துவத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.

கொழுப்பு குறைந்தால் ஆரோக்கியம்

தினசரி நடைப்பயிற்சி, ஓடுதல், நீந்துதல் போன்ற பயிற்சி களைச் செய்வது உடலுக்கும் மனத்துக்கும் அவசியம். வயிற்றுக்கொழுப்பும் உடல் உறுப்புகளைச் சூழ்ந்து சேரும் கொழுப்புகளும் குறைவதற்கு இந்தப் பயிற்சிகள் வழி வகுக்கின்றன. வயிற்றில் கொழுப்பு குறைவது வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் மேம்படுவதற்கு உதவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in