

மனிதனுக்கும் ரோபோக்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் நோக்கத்தில், புதிய வகையிலான மின்னணுச் சருமத்தை மலிவான விலையில் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் கார்னெகி பல்கலைக்கழகமும் போர்ச்சுகலின் கொயிம்பிரா பல்கலைக்கழகமும் இணைந்து இழுதன்மை கொண்ட மெல்லிய மின்னணுச் சருமத்தைக் கண்டுபிடித்துள்ளன. ரோபோக்களுக்கு அழுத்தம், வெப்பம் உள்ளிட்ட பல உணர்ச்சிகளை உணரும்திறனை இந்தச் சருமம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசை ஆரோக்கியத்துக்குப் புரதம்
சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இந்தியாவில் 68 சதவீத மக்கள் புரதச் சத்துக் குறைபாட்டுடனும் 71 சதவீத மக்கள் மோசமான தசை ஆரோக்கியத்துடனும் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்த ஆய்வில், இந்தியாவில் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களில் 84 சதவீதத்தினரும், அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களில் 65 சதவீதத்தினரும் புரதத் சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எஸ்.ஒ.எஸ் (IPSOS) என்ற சர்வதேச நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. மோசமான தசை ஆரோக்கியத்துக்கும் புரதச் சத்துக் குறைபாட்டுக்கும் இருக்கும் தொடர்பை இந்த ஆய்வு உறுதிசெய்திருக்கிறது. உடல்நிலையைச் சீராக வைத்துகொள்வதற்குத் தசை ஆரோக்கியம் மிகவும் அவசியம்.
தொகுப்பு: என்.கெளரி, முகமது ஹுசைன்