

# பவுத்திரத்தை எப்படித் தவிர்க்கலாம்?
ஐம்பது வயதைக் கடப்பவர்களில் பாதிப் பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவைச் சாப்பிடுவதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.
# ஃப்ளூ வராமல் தடுப்பது எப்படி?
‘வைட்டமின் டி3’ சத்து கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம். காளான், ஆரஞ்சு போன்வற்றில் இந்தச் சத்து அதிகம். உணவில் சர்க்கரையைக் குறைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஃப்ளூ வைரஸும் தாக்காது.
# ‘பபுள் கம்’மை விழுங்கிவிட்டால் என்ன ஆகும்?
எந்தப் பெரிய பிரச்சினையும் வராது. உணவுக்குடல் வழியாகப் பயணித்து மலம் வழியாக வெளியே போய்விடும்.
# ஆரஞ்சு சாப்பிடுவதால் என்ன பயன்?
‘வைட்டமின் சி’ அதிகம் உள்ள பழம் ஆரஞ்சு. ‘ஃபிளாவொனாய்டு’ சத்து எல்லா சிட்ரஸ் பழங்களிலும் உண்டு. மூளையைக் காக்கும் சக்தி அதற்கு உண்டு.
# ஒரு நாளைக்கு நம் இதயம் எத்தனை முறை துடிக்கிறது?
ஒரு நாளைக்குச் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரத்து 900 காலன்கள் ரத்தத்தை ‘பம்ப்’ செய்கிறது. மனிதரின் ஆயுள் காலத்தில் இதயம் ஒரு கணம்கூட ஓய்வெடுப்பதே இல்லை.