

நகைச்சுவைத் துணுக்கு ஒன்று உண்டு. “நேத்து ஆபீஸ்லேர்ந்து வீட்டுக்கு வரும்போது செல்போனைப் பார்த்துக்கிட்டே என் வீட்டுக்குப் பதிலா, பக்கத்து வீட்டுக்குப் போய் சோபாவில் உட்கார்ந்துவிட்டேன்.” “அய்யய்யோ.. அப்புறம் என்ன ஆச்சு?” “பக்கத்து வீட்டம்மாவும் மொபை லைப் பார்த்துக்கிட்டே காபி போட்டு எங்கிட்ட கொடுத்துட்டாங்க!” மனிதர்களின் திறன்களில் முதன்மையானது கவனிக்கும் திறன்.
சூழலுக்கு ஏற்றவாறு நாம் எதிர்வினை ஆற்ற இன்றியமையாதது, நமது கவனிக்கும் திறன் (Attention). முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் அறிவுத்திறன் செயல்பாடுகளில் முக்கியமானது, கவனம். ஆங்கிலத்தில் ‘Attention’, ‘Concentration’ என அழைக்கப்படும் இரண்டு வார்த்தை களுக்கும் நாம் கவனம் என்கிற சொல்லையே பயன்படுத்துகிறோம். ஆனால், இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.