

எனக்கு வயது 45. நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம் கட்டுப் பாட்டில் உள்ளது. நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை பின்னந்தலையில் கடுமையான வலி ஏற்படுகிறது. ஊசி வைத்துக் குத்துவது அல்லது சம்மட்டியைக் கொண்டு அடிப்பதுபோல வலி தெறிக்கிறது. அந்த நேரத்தில் ஓரிரு பாரசிட்ட மால் மாத்திரை உட்கொண்டால் வலி குறைகிறது. திரும்பவும் சில மாதங்களுக்குப் பிறகு வலி ஏற்படுகிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது டாக்டர்? - கே. ரவிக்குமார், அம்பத்தூர்.
மருத்துவத்தில் தலைவலி மிகவும் முக்கியமான நோய் அறிகுறி. அது ஏற்பட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக அடுக்கினால், துபாயில் உள்ள 'புர்ஜ் கலீஃபா' கட்டிடத்தின் உயரத்தை மிஞ்சிவிடும். உங்களுக்கே தெரியும் காய்ச்சல் வந்தாலே கூடவே தலைவலியும் வந்துவிடும்.