

எனக்கு வயது 27. அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுகிறது. ரத்தப் பரிசோதனையில் ஹீமோகுளோபின் அளவு, பிளேட்லெட் கவுன்ட்டும் குறைந்திருந்தது. சிகிச்சைக்குப் பிறகு ஹீமோகுளோபின் 12.4 ஆக அதிகரித்தது. ஆனால், பிளேட்லெட் கவுன்ட் இன்னும் குறைவாகவே உள்ளது. இதை ‘ITP’ பிரச்சினை என்று சொன்ன மருத்துவர், எலும்பு மஜ்ஜை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தினார். இது தீவிரமான பிரச்சினையா? - கா. ரம்யா, வேலூர்.
உங்களுக்கு ரத்த சோகையும், அத்துடன் பிளேட் லெட்டுகள் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மருத்துவர் ஐடிபி (ITP-Idiopathic Thrombocytopenic Purpura) 'நோயெதிர்ப்பு திராம்போ சைட்டோபீனியா' இருப்பதாகக் கணித்துள்ளார். உங்களது உடல் எதிர்ப்பாற்றல் புரதங்கள் தட்டணுக்களைத் தாக்கிச் சிதைப்பதால் தட்டணுக்கள் குறைந்துவிடும்.