

காலம் வெகுவாகக் கெட்டுக் கிடக்கிறது. இந்தக் கால இளைஞர்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கின்றனர். பெற்றோர், வயதானவர்களை மதிப்பதே இல்லை. எதற்கும் காத்திருக்கப் பொறுமை இல்லை. சின்ன கட்டுப்பாடுகூட அவர்களைப் பொறுமை இழக்க வைக்கிறது. எதிலும் ஆழ்ந்த கவனம் இல்லை. - செயின்ட் பீட்டர் - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்னது
எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு வருவது இயல்புதான். சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதுவதற்கு சாக்ரடீஸ் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தார். வாய்மொழியாகவே கேட்டு மனப்பாடம் செய்து வழிவழியாக வருவதே உண்மையான அறிவு. அதுதான் மூளைக்குச் சிறந்த பயிற்சி.