

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்று நோய் முதன்மையானது. பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் கணிசமானவை. காரணம், பெண்களின் தயக்கம். உடல் சார்ந்த பிரச்சினைகளை வெளியே சொல்வதில் பெண்களுக்கு எப்போதும் தயக்கம் இருக்கும்.
இதில் படித்தவர் - படிக்காதவர், கிராமம் - நகரம் என்று எந்த வேறுபாடும் இல்லை என்று அரசின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்தத் தயக்கம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதைப் பலரும் அறிவதில்லை. அதனால்தான், பெண் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தை ‘மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாத’மாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கிறார்கள்.