

மழைக் காலம் நெருங்கிவிட்டது. டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஃபுளூ காய்ச்சல் போன்றவற்றின் பாதிப்பு அதிகரிக்கலாம். பொதுவாக மழைக்காலத்தில் தட்பவெப்ப மாறுபாட்டால் வரக்கூடிய வைரஸ் காய்ச்சல்களை எப்படித் தவிர்ப்பது? குறிப்பாக, குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தாக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி? பொதுவாக டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்குக் கொசுதான் முதல் காரணம்.
கொசுக்கள் கடிப்பதன் மூலம் உடலுக்குள் செல்லும் வைரஸ், சில நாள்களுக்குப் பிறகு அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். டெங்கு, மலேரியா மட்டுமல்ல; சிக்குன்குனியா, ஃபுளூ காய்ச்சல் போன்றவையும் ஏற்படலாம். சில நேரம் என்ன வகையான வைரஸ் காய்ச்சல் என்பது தெரியாமலேயே அது உடலைப் படுத்தி எடுத்துவிடும். இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் ஏன் ஏற்படுகின்றன?