

சாதாரண காய்ச்சலோ வைரஸ் காய்ச்சலோ எதுவானாலும், அந்த நேரத்தில் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குறிப்பாகக் கஞ்சி, பிரெட், பால், தண்ணீர் போன்றவற்றை மட்டுமே காய்ச்சல் உள்ளவர்களுக்கு வீட்டில் தருவார்கள். ஆனால், இவற்றைச் சாப்பிடப் பிடிக்காமல், பலரும் காய்ச்சல் காலத்தில் மெலிந்து களைப்பாகிவிடுவார்கள். ஆனால், காய்ச்சலுக்குப் பாதிப்பில்லாமல் வேறு உணவு வகைகளையும் சாப்பிடலாம்.
“காய்ச்சலின்போது அதிக உப்பு, காரம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் காய்ச்சல் இன்னும் அதிகமாகலாம். அதனால்தான் உப்பு, கார உணவு வகைகளைக் காய்ச்சலின்போது மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. காய்ச்சல் இருந்தாலும் ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். காய்ச்சலின்போது புரத உணவும் முக்கியம். காரம் சேர்க்காத பருப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.