

“மருத்துவத் தொழில், மருத்துவர்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும்” என்கிற எச்சரிக் கையுடன் மருத்துவம் படிக்கும் கனவையே மறந்துவிடச் சொல்லி வலியுறுத்துகின்றன, ஒரு தொழிற்சமுதாயமும் அதன் கட்டமைப்பும்! டாக்டர் கிரட்லின் ராய். 39 வயது மட்டுமே நிரம்பிய இதய அறுவை சிகிச்சை நிபுணர். சென்னையில் பெருங்கனவுகளுடன் தொடங்கிய ராயின் மருத்துவப் பயணம், பணியின்போது ஏற்பட்ட மாரடைப்பால் அண்மையில் முடிவுக்கு வந்தது.
புதுச்சேரி இதய மருத்துவரான தேவன், 42 வயதில் ஜிப்மர் மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசரசிகிச்சை, மயக்கவியல் நிபுணர் சௌரவ் மிட்டல் 39 வயதில் பணியின்போது மாரடைப்பால் மரண மடைந்த செய்தி எனத் தொடர்ச்சியாக இளவயது மருத்துவர்களின் மரணங்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கின்றன.