

உலகெங்கும் லட்சக் கணக்கான மக்களைப் பாதிக்கும் குதிகால் வலிக்குப் பொதுவான காரணங்களில் ஒன்று, பிளாண்டர் ஃபாசிடிஸ். இந்த நிலையின் அடிப்படைகள், பயனுள்ள சிகிச்சை உத்திகள் இரண்டையும் புரிந்துகொள்வது முக்கியம். பிளாண்டர் ஃபாசிடிஸ் என்பது பிளாண்டர் ஃபாசியாவின் வீக்கத்தைக் குறிக்கிறது.
இதுவொரு தடிமனான திசுப்பட்டையாகும். இது காலின் அடிப்பகுதியில் குதிகால் முதல் கால் விரல்கள்வரை இயங்குகிறது. பாதத்தின் வளைவை ஆதரிப்பதும், நடைப்பயிற்சி, ஓட்டம், நிற்கும் அதிர்ச்சியை உறிஞ்சுவதும் பிளாண்டர் ஃபாசியாவின் முதன்மைப் பணி.