

மருத்துவர் கு.கணேசனின் ‘இதயம் போற்று' தொடர் மிகச் சிறப்பு. எளிய உதாரணங்களோடு மக்களைக் கவரும் எளிய பாணியில் அவர் எழுதும் நடை, பிற மருத்துவ எழுத்தாளர் களுக்கு முன்மாதிரி.
இத்தொடரில் வெளிவந்த பல கட்டுரைகள் என்னுடைய கிளினிக் காத்திருப்பு அறையின் தகவல் பலகையை வெகுநாட்கள் அலங்கரித்திருக்கின்றன. தவறான சில மருத்துவக் கற்பிதங்களை இந்தத் தொடரில் தவிடுபொடியாக்கியுள்ளார் கு. கணேசன். உதாரணமாகக் கொழுப்பு, முட்டை பற்றிய கட்டுரைகள்.