

தாங்கவே முடியாத வலிகளில் தலைவலியும் ஒன்று. குறிப்பாக, ஒற்றைத் தலைவலி வந்தால் படுத்தி எடுத்துவிடும். ஒரு பக்கமாகக் கடுமையான வலியை ஏற்படுத்தி, எந்த வேலை யிலும் ஈடுபட முடியாத அளவுக்கு ஆளை முடக்கி வைத்துவிடும். ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? உலகில் பொதுவாகக் காணப்படக் கூடிய நோய்களில் ஒன்றுதான், இந்த ஒற்றைத் தலைவலி (Migraine).
2024-25 நிலவரப்படி உலக அளவில் 14 சதவீதத்தினர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 7 பேரில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 2.13 கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி, ஒருவரது தினசரி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த ஒற்றைத் தலைவலி சில நேரம் கணிக்க முடியாத, கண்டறிய முடியாத, தீர்க்க முடியாத நரம்பியல் தொந்தரவாகவும் கருதப்படுவது உண்டு.