

சமீபத்தில் கேரளத்தில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு 18 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதையும் அதற்குக் காரணமாக அமீபா எனும் ஒரு செல் உயிரி இருப்பதையும் அறிய முடி கிறது. நேக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) எனும் அமீபா வகை ஏற்படுத்தும் தொற்றின் விளைவாக மூளைக்காய்ச்சல் நோய் ஏற்படுகிறது. இதற்கு ‘பிரைமரி அமீபிக் என்செஃபா லிடிஸ்’ (Primary amebic encephalitis) என்று பெயர்.
வெப்பத்தில் வாழும் அமீபா: இந்த நேக்லேரியா அமீபா வகை, வெப்பமான நீர் நிரம்பிய குளம், குட்டைகளில் அதிகம் வாழ்கின்றன. இது வெப்பத்தை விரும்பும் அமீபாவாக இருப்பதால், பெரும்பாலும் வெயில் காலத்தில் இத்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது. இது உயிர் வாழ எந்த ஓர் உயிரையும் நம்பாமல் தானே உயிர்பிழைத்திருக்கும் வல்லமையுடன் இருக்கிறது.